Wednesday, January 10, 2007

படித்ததில் பிடித்தது

பூபாளத்திற்கொரு புல்லாங்குழல் - வெ.இறையன்பு - IAS

--------------------------------------------

தொற்று நோய்
-------------------

என் வீட்டுக் காம்பவுண்டு

சுவர் முழுவதும்

அம்மைத் தழும்புகள்;

காரணம்

பக்கத்து வீட்டுக்காரர்

பசுமாடு வைத்திருக்கிறார்.


தனிக்கட்சி

----------

நாங்கள் இருவரும்

காதலில் நம்பிக்கையில்லை

என்ற

எங்கள்

ஒத்த கருத்தினால்

அறிமுகமாகி,

சந்தித்து, பேசி

நண்பர்களானோம்.

அடுத்த ஆவணியில்

எங்கள் திருமணம்.


குற்றம்

-------

நமது விரல்களே

பட்டுவிட்டாலும்

விழிகள்

சிவக்காமலா

விடுவிடுகின்றன?


தன் பங்குக்கு

------------

எரியாத் மின்விளக்கை

ஏளனம் செய்தது நாய்

தன் பின்னங்காலைத் தூக்கி!