Sunday, February 25, 2007

Pachchai Kili Muthu Charam

சரத்குமார் ஒரு நடுத்தர குடும்பத்தலைவன். நடுத்தர வயது. மனைவி, ஆறு வயது குழந்தை. குழந்தைக்கு டயாபடீஸ். கவலையுடன் இருக்கின்ற சரத்துக்கு, ரயிலில் தினமும் பேசி பழக ஒரு தென்றல் - ஜோதிகா. ஒரு நாள், இருவரும் மாமல்லபுரம் செல்ல அப்போது பார்க்கிறான் வில்லன். சரத்தின் சமுதாய பயத்தை பயன்படுத்தி பணம் பறிக்க ஆரம்பிக்கிறான். பிறகுதான் தெரிகிறது சதி. வில்லனும் ஜோதிகாவும் ஒரே கும்பல். இவர்களுக்கு இதுவேதான் business. சரத் அவர்களை பழி தீர்க்கிறான்.

பாடல்கள் இனிமை. ஆனால், முதல் பாதி மிகவும் மெதுவாக செல்வதாக தோன்றும். ஆங்கில படத்தின் தழுவல் என்றாலும், இன்றைய தேதிக்கும் நடக்கும் உண்மை போலத்தான் தோன்றுகிறது.