Wednesday, March 14, 2007

பருத்தி வீரன்

கரடுமுரடான கிராமத்து கதை. ஜாதி, மாமா பெண்- அத்தை பையன் போன்றவைகளுக்கு இப்படம் விதி விலக்கல்ல. கார்த்திக் நன்றாக நடித்துள்ளான். நிறைய இடங்களில் காமெடி நன்றாக இருக்கிறது. ஆனால், இறுதிக்காட்சிகள் சற்று சங்கடமாகத்தான் இருக்கின்றன.

சரவணன் (அதன் பொண்டாட்டி ராஜ்ஜியம் படம் ஹீரோ ஞாபகம் இருக்கா?) ரொம்ப எதார்த்தமா நல்லா நடிச்சு இருக்கார். இப்ப நடிப்பு வந்து என்ன பண்ண? சின்ன வயசில ஹீரோவா இருந்தப்ப கோட்டை விட்டுட்டாரே!

மற்ற படங்களை ஒப்பிட்டு பார்க்கையில் இது நன்றாகவே வந்து இருக்கிறது. பார்க்கலாம்.

http://content.msn.co.in/Tamil/Entertainment/FilmReview/0703-03-2.htm#top