Monday, March 23, 2009

இன்று எந்தன் நெஞ்சம் சொன்னது... பாடல்


இது Anisuthide Yako Indu என்று தொடங்கும் முங்காறு மலே கன்னட படத்தின் பாடல் மெட்டில் நான் அமைத்தது.

(ஆண் குரல்)

இன்று எந்தன் நெஞ்சம் சொன்னது
                  நீதான் நீதான் என்னவள் என்று!
கனவு உலகினில் பிறந்து
                  எனக்காக வந்தனள் இன்று!
ஆஹா! சொர்க்கம் எந்தன் கையிலே!
                  தேவ மங்கை கையில் வந்தாள்
என்றும் இன்பமே!
                 இன்று எந்தன் நெஞ்சம் சொன்னது....


சூரிய ஒளிபட்டு மலரும் தாமரை போல
என் கண்னின் ஒளி பட்டு பூத்த பூ நீயன்றோ!

விஞ்ஞான விடுகதை நீயடி! 
ஒன்றும் விளங்காதவன் நானடி!

நிலவும் கூட விடுமுறை எடுக்கும்
உன்னை முகத்தை கண்ட அந்த நொடியே!

உந்தன் மனமோ எந்தன் சிறையடி!

ஓடி வந்து கட்டி கொள்ளடி!
என்னோடு ஒட்டிக்கொள்ளடி!

இதுவரை யாரும் கண்டிராத அதிசயம் நீ!
நடக்கின்ற மலர்வனம் நீயொரு நெருப்பில்லா காட்டுத்தீ!

இதயத்தை கேளடி உன் பெயர் சொல்லியே துடிக்கிறதே!

உன்னை அணைக்கும் தினத்தை எண்ணியபடியே
என் உயிரின் ஓட்டம் இருக்கிறதே!

நாம் சேர்ந்து வாழும் கற்பனை தினமும் நிஜமானால்
          வாழ்வின் பொருளே விளங்குமடி!
இதுவரை யாரும் கண்டிராத அதிசயம் நீ!

இன்று எந்தன் நெஞ்சம் சொன்னது
                  நீதான் நீதான் என்னவள் என்று!
கனவு உலகினில் பிறந்து
                  எனக்காக வந்தனள் இன்று!
ஆஹா! சொர்க்கம் எந்தன் கையிலே!
                  தேவ மங்கை கையில் வந்தாள்
என்றும் இன்பமே!
                 இன்று எந்தன் நெஞ்சம் சொன்னது....


(பெண் குரல்)
நட்பின் இலக்கணம் நீயடா..
உன்னோடு காதல் என்று சொல்வது பாவம்தானே..
உதிரம் சிந்தி நண்பன் உந்தன் உயிரையும் காப்பேன்..
உனக்கென வாழ்வதில் சுகமே..
ஆஹா! இன்று எந்தன் வாழ்க்கை சிறந்ததே! 


இது Anisuthide Yako Indu என்று தொடங்கும் முங்காறு மலே கன்னட படத்தின் பாடல் மெட்டில் நான் அமைத்தது. வெறும் பல்லவியை மட்டும் மொழியாக்கம் செய்துள்ளேன். முழு பாடலும் விரைவில்.
இதோ அந்த பாடலின் ஒளி-ஒலி கன்னடத்தில்:


Monday, March 09, 2009

வெண்ணிலா கபடி குழு - விமர்சனம்

ஒரு வரிக்கதை என்றாலும் நன்றாக எடுத்து இருக்கிறார் சுசீந்திரன். அவருக்கு பாரட்டுக்கள். கிராமத்தை மீண்டும் ஒருமுறை படம் பிடித்து காட்டி இருக்கிறது. ஆனால் வெயில், பருத்திவீரன் படங்களை ஒப்பிடும்போது இப்படத்தில் மசாலா கம்மி. இயல்பான நடிப்பு. அசல் கிராமத்து முகங்களை இறக்கிவிட்டு கலக்கி இருக்கிறார்கள். படம் நெடுகிலும் உயிரோட்டமான நகைச்சுவை. பார்க்கும்போது அவர்களுடன் என் இளமைக்கால கிராமத்து வாழ்க்கைக்கு சென்றுவிட்டு வந்தேன்.

கபடிக்கு லாயக்கு இல்லாத கோஷ்டி ஒன்று, மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெறுவதுதான் மொத்த கதையும். கடைசி புள்ளியை பெற்றுதரும் கதாநாயகன் மாரி துரதிஷ்டவசமாக போட்டியில் தனது குழுவை ஜெயிக்க வைத்துவிட்டு உயிர் இழக்கிறான்.

மாரியை பார்க்கும்போது ‘காதல் ஒவியம்’ கதாநாயகன் நினைவில் வருவதை தடுக்க இயலாது. பாடல்கள் எல்லாம் தென்றல். கமர்ஷியலுக்காக ஒரு ஒயிலாட்டம் என்ற பெயரில் கவர்ச்சி ஆட்டம். வெகுநாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படம்.

image

Sunday, March 08, 2009

Gandhi's belongings for Sale

In the past few days, one of the headline was "Gandhi's belongings for sale". The auction happened in New York. Anyhow all the government effort gone waste & at last it was bought by Vijay Mallaiya - a business man whose main business is liquor manufacturing :-)

First of all I am happy that Gandhi's belongings are now with an Indian. I don't know what kind of negotiation happened between government and Otis (the auctioneer) but surely none of the politicians & even Gandhi seva organizations came forward to buy the items for that huge price. Do you think politicians are not having that much money to buy those items? Mallaiya bought for $1.8 mn. Important point is that we need money to buy. The one has money bought it. And it is an Indian. What else we need?

Still there would be little indigestion on this matter - Gandhi's items in the hands of liquor manufacturing business man. May be Mallaiya want to do his prayer to the nation by buying Gandhi's items.

First of all, how come Gandhi's belongings reached a guy in New York? Who sold it to Otis?

Why did Government not take any constructive action on the auction? Even at least they could have tried buying it in the auction.

During these days, one thing I noticed is we were keenly watching what is happening. Hope you all agree that, Gandhi still living in our hearts.

Gandhi Mahan Ki Je!

Friday, March 06, 2009

Train Movement on the track

 

My long term video capture dream was to capture train movement on the track from entry till exit. Though it may be small wish but that one got satisfied on 01/30/2009. This is the video I took on that day when I was walking near the track.