Monday, May 25, 2009

குங்குமபூவும் கொஞ்சுபுறாவும் - திரைப்பார்வை

புதிய முகங்கள் என்றாலும் நன்றாக நடித்திருந்தார்கள். எனக்கு என் பள்ளி நினைவுகளை கொண்டு வந்தது. அதுவும் ஆசிரியர் கொடி ஏற்றுவதும் அதன் பிறகு, ”தாயின் மணிக்கொடி பாரீர் அதை தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்” என்ற பாடலும் அப்படியே நாங்கள் பள்ளியில் கடைபிடித்தது.

கடலோர கவிதைகளுக்கு பிறகு முட்டம் பக்கம் முழுவதுமாக படம் எடுத்திருக்கிறார்கள். முதலில் படம் படு வேகம். என்னடா, 9தாவது, 10வது படிப்பதில் ஆரம்பித்து உடனே பதினொன்னாவது தாவுறாங்களேன்னு பார்த்தா அதுக்கப்புறம் எல்லாம் ரொம்ப சோகம். இழுவை. பல காட்சிகள் யூகிக்க முடிந்தது. கடைசியில் இருவரும் இறப்பது தமிழ் சினிமாவின் புதிய ட்ரெண்டு. சோகத்தில் முடித்தால் படம் சூப்பர் ஹிட்டு தான் போங்க. பருத்திவீரன் படத்தை நியாபகப்படுத்துது. அது என்னவோ தெரியவில்லை - கிராமத்து படம் என்றாலே பெண் பூப்பெய்தும் காட்சியும் அது வைத்து சில ஜோக்குகளும் கட்டாயம் போல. படம் முழுவதும் பழைய பாடல்களை காட்சிகளுக்கு ஏற்றாற் போல போட்டு அசத்துறாங்க. ஆனா இதுவும் சென்னை 600028, சரோஜாவில் பண்ணிவிட்டார்கள்.

கதை: பிழைப்பு தேடி வரும் பாட்டியுடன் கூடவே வரும் ஸ்கூல் படிக்கும் ஹீரோயினை ரவுண்டு கட்டி காதலிகிறான் ஹீரோ ஸ்கூல் பையன். ஏழ்மை காரணமாக அக்காளின் கணவனே திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான். அவனிடம் இருந்து தப்பிதாள். ”உனக்கு என் பையன் கேட்குதான்னு” முடியை வெட்டி விரட்டியடிக்கிறாள் காதலிக்கும் பையனின் அம்மாகாரி. பாட்டியுடன் வேறு ஊருக்கு ஓடிப்போகும் கதாநாயகியை ஒரு குடிகார திருடனுக்கு கட்டிக்கொடுக்கிறார்கள். அவ்ளோதான். அதற்குள் ஹீரோ பித்து பிடித்தால் போல ஆக ஒரே சோகம். ஹீரோயின் ஒரே சோகம். பாட்டி ஒரே சோகம். ஒருவழியாக ஹீரோ உதவியுடன் ஜெயிலில் இருந்து வெளியே வரும் கதாநாயகியின் புருஷன் மீண்டும் ஒரு கொலை செய்ய அதை ஹீரோ பழியேற்க அவனை சாகற வரைக்கும் அடிக்கிறார்கள். காப்பாற்ற கதாநாயகி ஓடி வர அவரும் அடிபட்டு சாக ஒருவழியாக படம் முடிவுக்கு வருகிறது.

”நான் வரமாட்டேன்  நினைக்க பல காரணங்கள் தெரிந்த உனக்கு நான் வருவேன் நம்ப ஒரு காரணம் கூட கிடைக்கல இல்ல” என்ற வசனம் நச். நல்ல படம் - பாதி வரையில்.

 

image காதலுனுடன்

 

image தர்ஷனா உண்மையில் ஒரு மெடிக்கல் படிக்கும் மாணவியாம்!

image குடிகார கணவனுடன்

image பாட்டியுடன்

No comments:

Post a Comment