Monday, July 06, 2009

பண வீக்கவிகிதம் படுத்தும் பாடு

”பண வீக்கம் என்றால் என்ன? அதனால் எனக்கு என்ன?” - அடிக்கடி என்னிடம் தோன்றும் கேள்வி இது. பணவீக்கம் 13 சதவீதம் என்கிறார்கள். அரிசி விலை 32ரூ. பணவீக்கம் இப்போது -0.2 சதவீதம் என்கிறார்கள். இப்போதும் அது 32ரூ. என்ன வித்தியாசம்? இந்த பணவீக்கத்தால் யாருக்கு என்ன லாபம்?

ஆனால் மத்திய அரசோ நாங்கள் ஆட்சிக்கு வந்ததால் தான் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது என்கின்றனர். ”அது கட்டுக்குள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எந்த மாற்றமும் இல்லை என்றாகிவிட்டபின் நான் எதற்க்காக அதைப்பற்றி கவலைப்பட வேண்டும்?” என்கிறது மனம். எல்லாம் அவனுக்கே வெளிச்சம்.

No comments:

Post a Comment