Sunday, August 23, 2009

’கந்த’சாமி - திரைப்பார்வை

எதிர்ப்பார்ப்பு இல்லாமல் சென்றால் ஏமாற்றம் இல்லை. பிரம்மாண்டமோ பிரம்மாண்டம்! உழைப்போ உழைப்பு! ஆனால் இரண்டு வருடங்களுக்கும் மேலாக பல செய்திகளை ஏற்படுத்தி வந்த இந்தப்படம் எதிர்ப்பார்பை பூர்த்தி செய்யவில்லையோ என்று தோன்றுகிறது. கதைக்கு கவலைப்பட வேண்டியது இல்லை. ரமணா, அந்நியன், ஜெண்டில்மேன், செல்லமே என்று சில படங்களை எடுத்துக்கொண்டு ஒரு கதை அமைத்திருக்கிறார்கள். ஏழைக்கு உதவு என்ற செய்தி - பல கோடி பொருட்செலவில்! திருப்போருர்

கந்தசாமி சன்னிதான மரத்தில் எழுதி வைக்கும் குறைகள் தீர்த்து வைக்கப்படுகிறது. இது சாமியின் செயலா அல்லது ஆசாமியின் செயலா என்ற புலன் விசாரணையை பிரபு நடத்துகிறார். உண்மையில் லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரியான கந்தசாமி (விக்ரம்) இருப்பவர்களிடம் அடித்து இல்லாதவர்களிடம் கொடுக்கிறார் - சாமியின் பெயரால். ஒருமுறை விசாரணைக்கு ஆஷிஷ் வித்யார்த்தி வீட்டில் ரெய்டு நட்த்தியதால், அவர் மகள் ஷ்ரேயா பழிவாங்க பல விஷயங்களை அரங்கேற்ற அது முடியாமல் போகிறது. காதல் வலையை விரித்து விக்ரமை மடக்குகிறார். மெக்சிகோவெல்லாம் சுற்றி கதை ஒருவழியாக முடிகிறது. சட்டத்தின் முன் விக்ரம் நிறுத்தப்பட்டாலும் வழக்கம்போல - “குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாததால்....”

kandasamy குறிப்பிட்டு சொல்லவேண்டியது - விக்ரமின் மெனக்கிடல். நன்றாக உழைத்து இருக்கிறார். கோழி போல அவரின் ஆக்‌ஷன் சண்டைகாட்சிகளில் அமர்க்களம். ஆனால் அவர் உழைப்பை பல படங்களில் பார்த்தால், all votes go to - ஷ்ரேயா. மார்டன் கேர்ள் என்ற போர்வையில் director அவரை நமீதாவை மிஞ்சும் அளவுக்கு இறக்கி விட்டிருக்கிறார். ஷ்ரேயாவுக்கு இனி ரசிகர் மன்றங்கள் பல திறக்கப்படலாம். வில்லனுக்கு ஒரு பாடல் கொடுத்திருப்பது டைரக்டரின் தைரியம்தான்.

சறுக்கல்கள் பல. பாதி படத்திற்க்கும் மேல் ஸ்லோமோஷன் சீனைக் கண்டால் நமக்கே எரிச்சல் வருகிறது. பிரம்மாண்டத்தை காட்ட அவ்ளோ ஸ்லோ மோஷன்கள்! காமெடி என்ற பெயரில் வடிவேலு, சார்லி, மயில்சாமி எல்லாம் மொக்கை ரகம். என்னவோ படம் முடிந்த பிறகு இடைசொருகல் செய்தது போல இருக்கு. இன்னொன்று லாஜிக் இடிக்ககூடாதுன்னு எல்லா ’திடுக்’ சீனுக்கும் ஒரு ஃப்ளாஷ்பேக் சீன். அல்டிமேட் காமெடி - விக்ரம் ஏழைகளுக்கு உதவ இப்படியொரு முடிவை எடுக்க காரணமாக அமைந்ததாக காட்டும் ஃப்ளாஷ்பேக்தான் - ரொம்ப டம்மி பீஸ். ஐஸ்வர்யாராய் போல பெண்வேடம் போட்டு வருவது காமெடிக்காக என்பது இன்னமுமே நெருடுகிறது. இசை சற்று இடங்களில் போர்.

image

நீங்க நல்லது சொறீங்க -- சந்தோஷம். அதை இன்னும் கொஞ்சம் நல்லா சொல்ல கூடாதா? கந்தசாமி கொஞ்சம் ’கந்த’சாமி.

2 comments:

  1. Nice review. Feels like reading a review in Anandha vikatan. Especally the last word "kantha"sami.
    keep posting reviews like this.

    ReplyDelete
  2. Nice review. Feels like reading a review in Anandha vikatan. Especally the last word "kantha"sami.
    keep posting reviews like this.

    ReplyDelete