Saturday, January 31, 2009
Friday, January 09, 2009
தமிழ் எண்ணளவுகளும் மற்றும் நீட்டல்/நிறுத்தல்/முகத்தல் அளவைகள்
ஏறுமுக இலக்கங்கள்
1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thouand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் - one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் - one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம்
10000000000000000000 = பரார்த்தம்
100000000000000000000 = பூரியம்
1000000000000000000000 = முக்கோடி
10000000000000000000000 = மஹாயுகம்
இறங்குமுக இலக்கங்கள்
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்
அளவைகள்
நீட்டலளவு
10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை
பொன்நிறுத்தல்
4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்
பண்டங்கள் நிறுத்தல்
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்
முகத்தல் அளவு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
பெய்தல் அளவு
300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
48 96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி
Author : Babou at 1/09/2009 09:18:00 AM | Links to this post
Tags: General
Thursday, January 08, 2009
ஜனநாயம் இன்னும் சாகவில்லை
ஆம். இன்று ஒருமுறை அது நிரூபணம் ஆனது. ஜார்கண்ட் மாநிலத்தின் தற்போதைய முதல்வர் சிபு சோரன் இடைக்கால தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது இதற்கு சான்று. ஒரு ஆளுங்கட்சி அதுவும் முதல்வர் போட்டியிட்டாலே வெற்றி என்ற வெட்டிப்பேச்சுக்களுக்கு வேட்டு வைத்த மக்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் திண்ணமாக இருக்கிறார்கள் என்பது விளங்குகிறது. பல வழ்க்குகளில் குற்றம் சாட்டப்பட்ட பின்னரும் காங்கிரஸ் அரசியல் ஆதாயம் காரணமாக ஆதரவு அளித்து சோரனை முதல்வர் ஆக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏன் இந்த அரசியல் கட்சிகள் கறை படிந்த கைகளுக்கும், தவறு செய்து தண்டனை பெற்றவர்களுக்கும் இன்னமும் துணை போய் தங்களின் கீழ்த்தரமான போக்கை கைவிடாமல் இருக்கின்றவோ?
இன்னொரு செய்தி என்னை பாதித்தது. ஆயுதம் வீட்டில் வைத்திருந்ததாகவும், தீவிரவாதிக்களுக்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு ஜெயில் தண்டனையும் பெற்ற சஞ்சய் தத்திற்க்கு உ.பி. நாடளுமன்ற தேர்தலில் சீட் தர சமாஜ்வாதி கட்சி முன்வந்துள்ளது என்பது தான் அந்த செய்தி. ஏன் இப்படி நாட்டை தகுதியற்றவர்கள் கையில் ஒப்படைக்கின்றவோ இந்த மூன்றாம் தர கட்சிகள்?
தரமில்லாத வேட்பாளர்களையெல்லாம் தோற்கடிக்கச் செய்து ஜனநாயம் இன்னும் சாகவில்லை என்பதை மேலும் மேலும் நிலைநாட்டவேண்டிய கடமை நம்மை போன்ற பொதுமக்களிடம் தான் உள்ளது.
Author : Babou at 1/08/2009 07:35:00 AM | Links to this post
Tags: General
Sunset at Shantivana (near my house)
நேற்று மாலை சூரியன் மேற்கே மறைந்து கொண்டிருந்த போது நான் எடுத்த இந்த புகைப்படம் என் மனதை கவர்ந்தது.
Author : Babou at 1/08/2009 01:43:00 AM | 0 comments Links to this post
Tags: General
Friday, January 02, 2009
Charminar Photo taken in my mobile - Very good for wallpaper
Original Size: 1600 * 1200
Taken Date: 04th Dec 2008
Place: Charminar, Hyderabad
Author : Babou at 1/02/2009 01:57:00 AM | 0 comments Links to this post
Tags: General
February 2009 December 2008 Home