Wednesday, September 01, 2010

பிரிந்த காதல்... சேர்ந்த போது....

முன்னுரை - என்னுடைய "பிரிந்த காதல்" சிறுகதையை படித்துவிட்டு ஒரு வாசகருக்கு மனம் ஒப்பவில்லை. சார் எப்படியாவது காதலை சேர்த்து வையுங்கள் என்று வாதாடினார். அவரையே என் கதைக்கு தொடர் எழுதும்படி கேட்டுக்கொண்டேன். என்ன வேகம்! அடுத்த நாளே தனது ஆவலை தீர்த்துக்கொண்டார். அவர் எழுதிய கதை தொடர்ச்சி இதோ.

===========================

குட் பய் சொல்லிவிட்டு போனவளை பார்க்க மனமில்லாமல் அலைகளையே வெறித்து பார்த்து கொண்டு இருந்தான் சேகர். ஏதோ டன் கணக்கில் எடையை சுமப்பது போல் நெஞ்சில் ஒரு வலி. அந்த அலைகளை போலவே அவனது மனத்திலுள்ளும் ஆர்ப்பாட்டம்.நேரம் போனது தெரியாமல் ஏதேதோ எண்ண அலைகள் அவனுள்.

"வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ..விண்ணிலே பாதை இல்லை..உன்னை தொட ஏணி இல்லை" SPB குரல் அவனை தட்டி எழுப்பியது...செல்பேசியில் அம்மா...

"அம்மா..சொல்லுங்க.."

"டேய் எவ்ளோ நேரமாச்சு...எங்கடா போய்ட்ட.?சாப்ட வேண்டாமா? நாளைக்கு ஈவ்னிங் கிளம்பிடுவ இல்ல? அம்மா கூட கொஞ்ச நேரம் பேச கூட உனக்கு டைம் இருக்காது என்ன? ...."
அம்மா அவள் பாசத்தை கேள்விகளாக கொட்டினாள்.அம்மாவின் வார்த்தைகள் அவனது வலியை குறைத்தது போல உணர்ந்தான்.

"இல்லம்மா...friendaa பாக்க வந்தேன் டைம் ஆய்டுச்சு...15 மினிட்ஸ்ல வீட்ல இருப்பேன்....சேந்தே சாப்டலாம்..."

போனை கட் செய்தான்..... அவனுக்கு ஆறுதல் அளித்த அலைகளுக்கு நன்றி சொல்லிவிட்டு, பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினான். அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்ததில் புனிதாவை மறந்தே போனான் மறுநாள் மாலை சென்ட்ரலில் ரயில் ஏறும் வரை.

ரயில் பயணங்கள்தான் நாம் கேட்காமலேயே நமது கடந்த கால நினைவுகளுடன் நம்மை நடை போட வைத்து விடும்.அதுவும் ஜன்னலோர சீட் என்றால் கேட்கவே வேண்டாம்.ரயில் அரக்கோணத்தை நெருங்கும் போதே புனிதாவின் நினைவுகளில் ஆழமாக ஆழ்ந்து போயிருந்தான்.


கல்லூரி காலங்களில் அவளின் கை கோர்த்து நடந்தது, லாஸ்ட் period கட் அடித்து விட்டு கேன்டீனில் பொழுதை போக்கியது, செமஸ்டர் எக்ஸாம் நாட்களில் கம்ப்யூட்டர் லேப் முன்பு வைத்து அவள் சொல்லி கொடுத்த பாடங்கள் என அவளுடான நினைவுகளை காதலிக்க தொடங்கினான்... வழக்கமாக காதலில் தோற்றவர்கள் செய்வதுதானே...


.."முத்தம் கொடுத்தா கொழந்த பொறக்கும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்"...படக்கென சிரித்தே விட்டான் சேகர்...அருகில் இருந்த சிறுமி அவனை பார்த்து சிரித்து விட்டு தன் தாத்தாவிடம் ஏதோ தெலுங்கில் சொன்னாள்...நினைவுகளில் இருந்து மீன்டவன் ஜன்னல் வழியாக பார்த்தான். ரயில் எங்கோ நின்று கொண்டிருந்தது...ரசம்பேட்டா ஸ்டேஷன்...மணியை பார்த்தான்..9 ஐ கடந்திருந்தது...அம்மா பொடி விரவி கொடுத்த இட்லியை சாப்பிட மனமில்லாமல் சாப்பிட தொடங்கி பின் அம்மா இன்னொரு இட்லி வச்சிருக்கலாம்ல என நினைத்து கொண்டு பேப்பரோடு இலையை மடித்து வெளியே விசினான்.
எக்ஸ்க்யுஸ்மீ "மீரு கொஞ்சம் கஷ்ட படி நாக்கு லோயர் பெர்த் இஸ்தாரா...காவால் அண்டே நா அப்பர் பெர்த் மீர் தீஸ்கோண்டி..." பெரியவர் சேகரிடம் ஏதோ தெலுங்கில் சொன்னார்... லோயர் பெர்த்ல அவர் படுத்தக்கலாமான்னு கேட்கராருன்னு மட்டும் புரிந்தது அவனுக்கு...ஒன்றும் பேசாமல் மேலே ஏறி படுத்துக்கொண்டான். ஜன்னல்களை பிரிந்ததால் என்னவோ புனிதாவை பற்றி அதிகம் எண்ணாமல் உறங்கி போனான்....

எழுந்து பார்க்கும் போது மணி 8 ... முகத்தை கழுவி விட்டு...ராஜுவிற்கு போன் செய்தான்....

டேய் மச்சி சொல்லுடா....நானே போன் பண்ணனும்ன்னு இருந்தேன்....என்னாச்சு? சக்சஸா?

மச்சான் train 8:30 க்கு ரீச் ஆகும்ன்னு நினைக்கறேன்...நீ சாவிய மணியண்ணா கடைல கொடுத்துட்டு ஆபீஸ் போடா...எனக்கூறி போனை கட் செய்தான் சேகர்...
மனமே இல்லாமல் அலுவலகம் சென்ற சேகருக்கு வேலையில் மனம் லய்க்கவில்லை. நாட்கள் ஓடின. புனிதாவின் திருமணமும் இனிதே நிறைவேறியதாக கேள்விப்பட்டான் சேகர். கல்லூரியில் ஒரு ஹாய் மட்டும் சொல்லும் அளவில் உள்ள நண்பர்களுக்கு கூட பத்திரிக்கை அனுப்பினாள். ஏனோ அவனுக்கு அனுப்பவில்லை புனிதா. கல்யாணத்தன்று ஏதேனும் பிரச்சனை செய்வான் என்று எண்ணினாளோ இல்லை இவளை மணக்கோலத்தில் பார்க்கும் தைரியம் சேகருக்கு இல்லை என்று நினைத்தாளோ.

ராஜுவின் அட்வைஸ். இன்ன பிற நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகள். முதல் காதலை மறப்பதற்காக. சேகரும் முயற்சி செய்தான். புனிதா தன்னை ஏமாற்றி விட்டாள் என்பதை திரும்ப திரும்ப அவன் மனம் சொல்லிக்கொண்டிருந்தது. அவளை மறக்கும் சேகரின் முயற்சிகளில் இதுவும் ஒன்று. ஆனால் அவனே அறியாமல் அவள் நினைவுகள் இவன் மனதில் சிலந்தி வலைகளாய் பின்னலானது. எப்போதாவது கல்லூரி போட்டோ ஆல்பங்களை எடுத்து புனிதாவை தேடுவது, கல்லூரி காலங்களில் அவள் அனுப்பிய மெயில்களை படித்து சிரித்து கொண்டிருப்பது, காலை வெண்ணீரில் குளிக்கும்போது நிலை கண்ணாடியில் படரும் ஆவியில் "புனிதா" என்று எழுதி பார்ப்பது என அவள் நினைவுகளை நெஞ்சோடு அகலாது பார்த்துக்கொண்டது அவன் மனம். அவன் மனம் புனிதாவை மறப்பதற்கு விரும்பவில்லை என்பதே நிதர்சனம். சில மாதங்களில் ஏனோ ஹைதராபாத் அவனுக்கு பிடிக்காமல் போனது. ஒரு மாற்றம் வேண்டுமென விரும்பி பெங்களூரில் SAP கம்பெனியில் சேர்ந்தான்.

**********************

நாட்கள் மாதங்களாயின, மாதங்கள் வருடங்கள் ஆயின. பின் அவன் வாழ்கையில் காதல் குறிக்கிடவே இல்லை. பெண்களுடன் சகஜமாக பேசுவதால் சிலரால் மீண்டும் காதல் வாசம் செய்யும் வாய்ப்பு வந்தது சேகருக்கு. ஆனால் முதல் காதல் போல் சேகரை எதுவும் அடித்து இழுக்கவில்லை. "முதல் காதலை மறப்பது சுலபமில்லை என்பதே பொய்...முதல் காதலை மறக்கவே முடியாது அது உண்மையிலேயே காதலாக இருந்தால். இரண்டாவது காதல், கல்யாணம் ...these are just for survival on this damn society" ...சேகர் குடித்தால் கூறும் வழக்கமான டைலாக். பெண்கள் வாசம் அதிகம் இல்லாத வாழ்கை சேகருக்கு பிடித்து போயிருந்தது. புனிதாவை முற்றிலும் மறந்தே விட்டதாக நம்பியது சேகரின் மனம். ஆனாலும் அவள் நினைவுகள் இவனை எப்போதாவது தழுவ மறந்ததில்லை. ஜன்னலோர பஸ் பயணம்,தனிமையான மழை நேர coffee , மனதை வருடும் மெலடி பாடல்கள், இரவு முதல் சரக்கு அடித்து விட்டு அதிகாலை நேரம் நண்பனோடு பேசும் போது...என இப்படி பல நேரங்களில் புனிதாவின் நினைவுகள் சேகரை தென்றலாக வருடிப்போகும்.காதலின் வலியில் கூட ஒரு சுகம் இருப்பதை அவன் மனம் உணரத்தொடங்கிய காலங்கள் அது.

ஒரு நாள் எதேச்சையாக நண்பனின் ஆர்குட் ப்ரோபைலில் சென்ற போது ஒரு ஸ்க்ராப்..."Punitha Ramesh :I m fine Sundar..Hw abut u? ".
ஏனோ அவளின் ப்ரோபைல் உள்ளே சென்று பார்ப்பதை அவன் மனம் தடுக்கவில்லை. அவளது போட்டோ ஆல்பத்தில் ரமேஷின் போட்டோவை பார்த்துவிட்டு ஜீரணிக்க முடியவில்லை. புனிதாவிர்க்கு பொருத்தமே இல்லாத ஒரு முகமாக தோன்றியது சேகருக்கு. "புனிதா தேவதை மாதிரி..இவனப்போய்" என மனதினுள் கடிந்து கொண்டே குட்டி புனிதாவின் போட்டோவையும் ரசித்து கொண்டிருந்தான். புனிதாவின் தோழி நிஷா ஒரு வருடத்திற்கு முன்னாள் ஏதோ பேசும் போது ஜீடாக்ல சொன்னதாக ஞாபகம் "
Sekar...punitha was blessed with a baby girl....hope you know that she got settled in Aus? .... பதில் ஏதும் கூறாமல் hmmm ... என்றும் மட்டும் சேகர் ரிப்ளை செய்ததை புரிந்து கொண்ட நிஷா பின் புனிதாவை பற்றி அவனிடம் பேசியதே இல்லை. எப்போதாவது புனிதாவின் ஆர்குட் ப்ரோபைலில் சென்று பார்ப்பது சேகரின் வழக்கம். அது ஏனென்று அவன் மனதிற்கு தெரியாது.

காதலின் வலியை மட்டும் கண்மூடித்தனமாக காதலிக்கும் சேகரின் மனம் அன்று போல் என்றும் சலனம் அடைந்தது இல்லை. வழக்கம் போல் ஆர்குட்டை ஒப்பன் செய்த சேகரின் அடி வயற்றில் அட்ரீனலின் ஆறு போல் ஓடியது. கீழே உள்ள வரிகளை மீண்டும் மீண்டும் படித்து ரசித்து கொண்டிருந்தான் சேகர்.

Punitha Ramesh<punitha1983@gaamaill.com>
organise your friends
Google Talk Options
Allow this user to chat with me
Is Punitha your friend?
Yes No

புனிதாவை add செய்து விட்டு பின் சிறிது நேரம் கழித்து சேகர் ஜீடாக் ஓபன் செய்த போது புனிதா ஆன்லைனில் இருந்தாள். கைகள் ஓடிச்சென்று ஹாய் புனிதா என டைப் செய்ய துடித்தது. ஏனோ சேகரின் மனம் அதற்கு இசையவில்லை. சிறிது நேரத்தில் ஒரு pop up விண்டோ. Punitha : Hi Sekar. How are you?...


என்ன பேசுவதென்று தெரியவில்லை மூன்று வருடங்களுக்கு பிறகு. சரியாக சொன்னால் ஆறு வருடங்கள். I m fine..its been a long time....how's lakshana? எனத்தொடங்கினான் சேகர். உனக்கு எப்படி தெரியும் அவ பேரு எனக்கேட்டவளுக்கு ஒரு ஸ்மைலியை பதிலாக தந்து விட்டு தொடர்ந்தான்.அந்த ஸ்மைலி ஆயிரம் பதில்களை சொல்லும். பின் ஏதேதோ பேசினாள். அவளது கணவரின் வேலை, ஆஸ்திரேலியா வாழ்கை, அவளின் வேலை எனத்தொடங்கி H1N1 வரை என்னன்னெவோ பேசினாள் அவர்களின் பிரிந்த காதலை தவிர. எப்போதாவது ஆன்லைனில் பார்த்தால் ஒரு ஹாய். சேகர் அதிகம் கேட்பது அவளது குழந்தையை பற்றியாக இருக்கும். அவள் அதிகம் கேட்பது " எப்போ உன் கல்யாணம்". பதிலாக ஸ்மைலியை தவிர எப்போதும் வேறொன்றும் பதிலாக தந்ததில்லை சேகர்.

ஒரு நாள் பேசும் போது திடிரென பெங்களூரை பற்றி விசாரிக்க தொடங்கினாள். என்னவென்று கேட்ட போதுதான் அடுத்த மாதம் அவளது கணவன் இங்குள்ள கேடர்பில்லர் என்ற கம்பெனியில் ஜாயின் செய்ய போவதாக அறிந்தான் சேகர். பின் வழக்கமான இயந்திரத்தனமான வார்த்தை பரிமாற்றங்கள். அவள் பெங்களூர் வந்த பிறகும் பெரிய மாற்றம் ஒன்றுமில்லை. சேகரும் அதை எதிர்பார்த்ததில்லை. புனிதாவுடன் பேசிவிட்டு விண்டோவை மூடும் போது அவனது மனதில் இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி. ஒரு புத்துணர்வு. சில நாள் ஒன்றும் பேசாமல் இருப்பாள். நான் ஏன் முதலில் ஹாய் சொல்ல வேண்டும் என்று ஈகோ இவனுக்கு. அவளும் அது போல் இருப்பாள் என்ற எண்ணத்தில் இருப்பான் சேகர். காலம் வேகமாக மாறினாலும் , பழைய காதலியோட பேசத்தொடங்கினாலும் அவனது காதல் வலியை சுமப்பதற்கு மறப்பதில்லை சேகர். என்றவாது புனிதாவின் நினைவகளோடு அதிகம் உறவாடி கண்களில் நீர் வர நெஞ்சில் வலியை பெருக்குவது சேகருக்கு பிடித்த ஒரு விஷயம். உண்மையாக காதலித்து தோற்றவர்களுக்கு மட்டுமே புரியக்கூடிய விஷயம் அது.

***********************


பின் சில நாட்கள் மாதங்கள் புனிதாவை காணவே இல்லை. ஜீடாகில் புனிதா ஆன்லைனில் இருக்கிறாளா என்று தினமும் பார்ப்பதை வழக்கமாக்கி கொண்டான் சேகர். அவள் பெங்களூரில் HAL அருகே வசிக்கிறாள் என்பதை தவிர சேகருக்கு வேறொன்றும் தெரியாது. தெரிந்தால் மட்டும் என்ன செய்யப்போகிறான். ஏழு எட்டு மாதங்கள் ஓடின. தன் தின அலுவல்களில் புனிதாவை மறந்தே விட்டேன் என மனதிற்கு அடிக்கடி சமாதனம் சொல்லிக்கொள்வான் சேகர். ஒரு நாள் மதியம் மூன்று மணி. கண்கள் சொக்க லேப்டாப்பை தட்டி கொண்டிருந்தான் சேகர். "ஆடுங்கடா என்ன சுத்தி நான் அய்யனாரு வெட்டு கத்தி" என விஜய் செல் பேசியில் போக்கிரி பொங்கல் வைப்பது எப்படி என அலறிய சத்தத்தில் தூக்கத்தில் இருந்து எழுந்து போனை எடுத்தான். ஏதோ ஒரு புதிய நம்பர்.

ஹலோ..

மறு முனையில் சற்று பதட்டத்தோடு "Can I speak to Sekar please"

Ya its me Sekar..May I know who is this?

சேகர் நான் புனிதா பேசுறேன்...

மூன்று வருடங்களுக்கு பிறகு அவளது குரல்...சில நொடிகள் பேச இயலவில்லை..

Sekar..You there..

சொல்லு புனிதா..என்ன விஷயம்..ரொம்ப நாளா ஒன்னும் நியுசே இல்ல என கேஷுவலாக பேச முயற்சித்தான்.

சேகர் கொஞ்சம் நீ இப்போ கிளம்பி மணிபால் ஹாஸ்பிட்டல் வரமுடியுமா? ரொம்ப அவசரம்...

என்ன பிரச்சனை என்னாச்சு என்றான் சேகர்...

ப்ளீஸ் கொஞ்சம் கிளம்பி வா....சொல்றேன்...என போனை கட் செய்தாள் புனிதா.

ஏதோ பிரச்சனை என்று உணர்ந்த சேகர் மேனேஜரிடம் சொல்லிவிட்டு தன் பைக்கை ஹாஸ்பிட்டலுக்கு விரட்டினான்.

பெங்களூரில் இத்தனை நாட்கள் இருந்தும் ஹாஸ்பிட்டல் செல்ல வேண்டிய அவசியம் வந்ததில்லை சேகருக்கு. மணிபால் ஹாஸ்பிட்டல் ஏர்போர்ட் ரோட்டில் உள்ளது என்பது மட்டும்தான் தெரியும். விசாரித்து சென்றான். ஹாஸ்பிட்டல் அடைந்தவுடன் புனிதா விழித்த செல் நம்பரை எடுத்து அழைத்தான். அவன் அழைப்புக்கு காத்திருந்ததற்கு அடையாளமாக ஒரே ரிங்கில் போனை எடுத்தாள் புனிதா. சேகர் 5th floor ரிசப்ஷன் வந்துடு. லிப்ட்டில் ஏறி சென்ற சேகருக்காக லாபியில் காத்திருந்தால் புனிதா.
மூன்று வருடங்களில் அதிக மாற்றம் இல்லை புனிதாவிடம். கண்கள் குளமாகி நின்று கொண்டிருந்தாள். சேகர் அருகே சென்றான்.

புனிதா என்னாச்சு...சுரேஷ் எங்க?. பதில் ஏதும் பேசாமல் இருந்தாள். குளமாக இருந்த அவள் கண்கள் உடைந்து கண்ணீர் வழிந்தோடியது. என்னதான் பிரிந்து விட்டாலும் , இந்த உலகிற்கு தன்னை தந்த தன் அம்மாவை விட அதிகம் நேசித்த ஒரு ஜீவன் கண்ணீர் வடிக்கும் போது மனம் சிறிது வலித்துதான் போனது சேகருக்கு.

Come on Punitha...Relax.... எனக்கூறி அவளை ரிசப்ஷனில் உள்ள சோபாவில் அமரச்செய்தான் சேகர்.

இப்போ சொல்லு புனிதா என்னாச்சு....

சேகர்...லக்க்ஷனா...லக்க்ஷனா...பேச முடியவில்லை புனிதாவாள்..கண்களை துடைத்து கொண்டு மீண்டும் தொடர்ந்தாள்.

நேத்து மார்னிங்க்ள இருந்து லக்க்ஷனா மூச்சு விட ரொம்ப கஷ்ட்டப்பட்டா. வீட்டு பக்கத்துல கிளினிக்ல டாக்டர்ட்ட காமிச்சேன். அவர் இம்மிடியட்டா மணிபால் கொண்டு போங்கன்னு சொல்லிட்டாரு. இங்க வந்து அட்மிட் பண்ணேன். நேத்து அப்செர்வேஷன்ல வச்சிருந்தாங்க. இன்னைக்கு அவளுக்கு ஹார்ட்ல ஏதோ ப்ராப்ளம். உடனே ஆப்ரேஷன் பண்ணனும்ன்னு சொல்லிட்டாங்க. பேப்பர்ல சைன்லாம் வாங்கினாங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. இங்க எனக்கு யாரையும் தெரியாது உன்னைத்தவிர. அதான் போன் பண்ணேன் எனக்கூறிவிட்டு மீண்டும் அழத்தொடங்கினாள்.

சேகருக்கு ஒரு நிமிடம் தலை சுற்றியது போலிருந்தது. ரமேஷ் எங்கே? கேட்கலாமா என்று நினைத்தவன் வேண்டாம் என எண்ணிக்கொண்டு , "புனிதா டாக்டர் எங்க இருக்காங்க வா போலாம் " என அழைத்து சென்றான். இவளை டாக்டரின் ரூம் வெளியே உட்கார சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.
Hello Doctor. I am Sekar , Punitha's Friend.
Welcome sekar please be seated புன்முறுவலோடு வரவேற்றார் டாக்டர் மைத்திரி.

Doctor may I know the complications of Lakshana?
மருத்துவ மொழிகள் என்றுமே சாமானியர்க்கு விளங்கியதில்லை. மருத்துவர்கள் அதை விரும்பியதுமில்லை.மைத்திரி ஏதேதோ கூறினார். லக்க்ஷனாவிற்கு செய்யப்போகும் ஆபரேஷன் பெயர் "Multi vessel coronary stenting " என்பதை தவிர வேறொன்றும் விளங்கவில்லை அவனுக்கு. இரவு 10 மணி அளவில் ஆபரேஷன் தொடங்கும் எனத்தெரிவித்தார்.

வெளியே வந்த சேகர் புனிதாவிடம் "பயப்படறதுக்கு ஒன்றுமில்லை சாதாரண ஆபரேஷன்தான் என வழக்கமான அறுதல் வார்த்தை கூறி அவளை தேற்ற முயற்சி செய்து தோற்றான். லக்க்ஷனா ICU வில் இருந்ததால் பார்க்க இயலவில்லை. புனிதாவினருகே ரிசப்ஷனிலேயே உட்கார்த்திருந்தான் சேகர். அதிகம் பேசவில்லை புனிதா. மாலை சேகர் வாங்கி தந்த காபியை மட்டும் குடித்தாள்.வேறொன்றும் சாப்பிடவில்லை. இரவு மணி 7 இருக்கும்.

"சேகர்..."விழித்தாள் புனிதா.

"சொல்லு புனிதா."

"சுரேஷ பத்தி நீ கேட்கவே இல்லை?"

"அது...அது...டென்ஷன்ல...வார்த்தைகள் வர மறுத்தன சேகருக்கு...மௌனமானான்.
விட்டுட்டு போயிட்டாண்டா...." கண்களின் வெளியே வரத்துடிக்கும் கண்ணீருக்கு தன் உதடுகளை கடித்து அணை போட்டாள்.

சேகருக்கு ஒரு நொடி அதிர்ச்சியை மட்டுமே முகத்தில் காண்பிக்க முடிந்தது. ஏனோ இந்த தருணத்திலும் புனிதா அவனை "டா" என்று அழைத்ததை அவன் மனம் கவனித்து விட்டது. கல்லூரியில் அவள் இவனை செல்லமாக டா போட்டு விழித்த நாட்கள் ஏனோ அவசியமில்லாமல் இப்போது அவன் மனதினுள் வந்து போனது. பிரிந்த பின் இத்தனை உரிமையோடு அவள் டா என கடந்த இணையப்பழக்கத்தில் கூட சேகரை விழித்ததில்லை. புனிதா பேசிக்கொண்டே இருந்தாள். அவளுக்கும் சுரேஷுக்கும் உள்ள பிரச்சனை, சுரேஷ் வேறோர் பெண்ணை விரும்பவது, அதற்காகத்தான் பெங்களூர் மாற்றி கொண்டு வந்தது, அவள் குடும்பத்தின் புறக்கணிப்பு என ஏதேதோ மனம் விட்டு சேகரிடம் கொட்டினாள். எதுவும் இவன் காதில் விழவில்லை ஒன்றை தவிர.

சேகர் அடுத்த மாசம் 13 ஆம் தேதி டிவோர்ஸ். திடுக்கிட்டு திரும்பினான் சேகர். அவள் தொடர்ந்து கொண்டிருந்தாள். என்ன பண்றதுன்னே தெரியலடா. லக்க்ஷனாவ நல்லா படிக்க வைக்கணும். உடனை ஒரு வேலைக்கு ட்ரை பண்ணனும்டா. வாழ்க்கைய பத்தி நினச்சா தலையே சுத்துதுடா சேகர்.

"புனிதா எல்லாம் சரி ஆய்டும். நான் இருக்கேன் நீ கவலைபடாதே" என்று சேகர் சொல்லி முடிப்பதற்குள் சேகரை சட்டென நோக்கினாள் புனிதா. அந்த பார்வையில் உள்ளது ஆயிரம் கேள்விக்குறிகளா இல்லை ஆச்சர்யக்குறிகளா என சேகருக்கு விளங்கவில்லை. மௌனத்தை பதிலாக தந்துவிட்டு அமைதியானாள். அந்த மௌனத்தில் ஒரு சாந்தம் இருந்ததை கவனித்தான் சேகர். ஏன் அப்படி சொன்னான் என அவனுக்கே புரியவில்லை.

Excuse me..Punitha ...? ஒரு குரல் குறுக்கிட்டது. வெள்ளை நிற உடையில் சிஸ்டர். ஏனோ நம் நெருங்கியவர்கள் உயிருக்கு போராடும் போது டாக்டர்கள் தெய்வங்களாகவும் சிஸ்டர்கள் அவர்களின் தூதர்களாகவும் தெரிவது தவிர்க்க முடியாத ஒன்று.

The operation will start by 9:45.It might go up to early morning. Doctor told to inform you.

மெளனமாக தலையசைத்தாள் புனிதா.தெய்வ தூதர் Fine take care எனக்கூறி விடைபெற்று அந்த நீண்ட ரிஷப்ஷனின் மறுமுனையில் ஒரு வெள்ளை புள்ளியாய் மறைந்தார்.

ஏனோ சேகரால் அதிகம் பேச முடியவில்லை. ஒரு வித மன உளைச்சல். புனிதா சாப்பாடு எதுவும் வேண்டாம் என்று சொன்னதால் சேகரும் சாப்பிடவில்லை. நேரம் வேகமாக ஓடியது. புனிதா சோபாவில் சாய்ந்து இருந்தாள். அவள் கண்களில் இருந்து வழியும் கண்ணீர் மூக்கின் முகப்பு தொட்டு சோபாவை நனைத்து கொண்டிருந்தது. மூன்று வருடங்களுக்கு முன்பு கனத்தது போல் ஏனோ சேகரின் மனம் கனமாகி கொண்டிருந்தது.

அதிகாலை 4 மணி இருக்கும். நண்கு கண் அசந்து போயிருந்தான் சேகர்.டாக்டரின் குரல்.

....So dont worry....She will be alright...she can move from ICU to room by today afternoon. Take some sleep Punitha...சிரித்து கொண்டே விடை பெற்று கொண்டிருந்தார் டாக்டர் மைத்திரி. லக்க்ஷனாவின் ஆபரேஷன் நல்ல படியாக முடிந்தது என்பதை அரைத்தூக்கத்தில் புரிந்து கொண்டான் சேகர்.

டாக்டர் சென்றவுடன் புனிதா தன்னை கட்டுபடுத்த முடியாமல் அழத்தொடங்கினாள் சேகரின் கைகளை பிடித்து.

"Punitha....everything will be alright....கவலைபடாதே...."

சேகர் அவளுக்கு ஆறுதல் கூறி அவளை ரூமில் படுக்க சொல்லி விட்டு ரிசப்ஷனில் அமர்ந்தான். எப்போது தூங்கினான் என அறியவில்லை. எழுந்து மணியை பார்த்தான். 7 :10 ஆகியிருந்தது. ரூமில் சென்று பார்த்தான். நிம்மதியாக தூங்கி கொண்டிருந்த புனிதாவை டிஸ்டர்ப் செய்ய வேண்டாமென நினைத்து அங்கிருந்து அகன்றான்.
வீட்டுக்கு சென்று குளித்து விட்டு புனிதாவிற்க்கும் ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வரலாம்ன்னு அங்கிருந்து கிளம்பினான். மேனேஜர்க்கு இன்னைக்கு லீவ்ன்னு மெசேஜ் செய்ய மொபைலை எடுத்தான். 4 Missed calls Amma . சைலண்டில் இருந்ததாலோ என்னவோ எடுக்க மறந்திருந்தான். திருப்பி அழைத்தான்.

டேய் சேகரு...என்னாச்சுடா..எங்க போய்ட்ட. எவ்ளோ தடவ அம்மா நேத்து கூப்ட்டேன் தெரியுமா?

சொல்லும்மா...சைலன்ட்ல போட்டுட்டு தூங்கிட்டேன் என சமாளித்தான் சேகர்.

சித்தப்பா போன் பண்ணி இருந்தார்டா. பொண்ணு வீட்ல அடுத்த சண்டே வர்றாங்களாம் நம்ம வீட்டுக்கு. நீ இந்த வாரம் ஊருக்கு வர டிக்கெட் புக் பண்ணிட்டேள்ள ..?அம்மா...அது.....இழுத்தான் சேகர்.

என்னடா....சொல்லு...

"இதெல்லாம் இப்போ வேணாம்..." திடமாக சொன்னான் சேகர்

என்னப்பா ஆச்சு உனக்கு.....நீ சரின்னு சொல்லிதான எல்லாம் பாத்தோம்?..அம்மாவின் கவலை ரேகை குரலில் தெரிந்தது சேகருக்கு.

அம்மா எல்லாம் அப்பறம் சொல்றேன். சித்தப்பாட்ட சொல்லி அவங்கள வர வேண்டாம்னு சொல்லிடுங்க என்று சொல்லி போனை கட் செய்தான் சேகர்.

சேகரின் தலை சுற்றுவது போல் இருந்தது. கணக்கு போட மட்டும் தெரிந்த அவனது மூளை கேட்டது ஆயிரம் ஆயிரம் கேள்விகள். இது சரிதானா? அம்மா சம்மதிப்பாளா? உறவுக்காரர்கள் என்ன சொல்வார்கள்? இது காதலால் வந்த கரிசனையா? என்ன இருந்தாலும் அன்னைக்கு உன்ன உதறிட்டு ரமேஷ் பின்னாடி போனவதான...?அவ மேல என்னடா தப்பு? அவ குடும்பத்துல கம்ப்பல் பண்ணி இருக்கலாம்ல? என்னதான் உன்னை உதறிட்டு போனாலும் நீ உருகி உருகி காதலிச்சவடா...கை விட போறியா?கேள்வி கணைகளால் தலையே வெடித்து விடும் போலிருந்தது. ஆனால் காதலிக்க மட்டுமே தெரிந்த அவன் மனம் மட்டும் தெளிவாக அந்த முடிவை சொன்னது " இதற்கு புனிதா சம்மதிப்பாள்...யோசிக்கறதுக்கு ஒன்றுமில்லை..everything will be alright ...". அந்த தெளிந்த மனதுடன் பைக்கை ஸ்டார்ட் செய்தான் சேகர். அதிகாலை பெங்களூரின் பனி தோய்ந்த காற்று அவன் மனதை இன்னும் லேசாக்கியது.

"முத்தம் கொடுத்தா கொழந்த பொறக்கும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்"..... சிரித்து கொண்டே பைக்கின் அக்சிலேட்டரை வேகமாக திருக்கினான். புனிதா பசியோடு இருப்பாளே......

தொடரும்

1 comment:

  1. Thanks for posting this sir....Nicely edited....:)

    ReplyDelete