Tuesday, September 07, 2010

Nostalgic Nonsense

சில சமயம் நாம் கேட்கும் பாடல்கள் ஏதோ மனதை பிசையும் நினைவுகளை ஏற்படுத்தும். ஏன்..எதற்கு அந்த பாடல் நமக்கு ஒரு வித சலனத்தை ஏற்படுத்துகிறது என்பதுகூட தெரியாது. ஆனால் என்னவோ பண்ணும். அதே மனநிலையில் இப்போது நான். இன்று ராஜ் மியூசிக்ஸ்’ல் அடுத்து அடுத்து நான் கேட்ட மூன்று பாடல்கள் -

“ஏய் அய்யாச்சாமி.. (வருஷம் 16)”...

“என் வானிலே.. (ஜானி)”...

“அழகிய கண்ணே.. (உதிரிப்பூக்கள்)”..

என்னை அந்தகால நினைவுகளுக்கு அழைத்துச் சென்று மனதை துவைத்து எடுத்தது. டி.வி. யை நிறுத்திவிட்டாலும் அகலாத பாடல்களாய் இப்போதும் காதுக்குள் ரீங்காரம்..

1 comment:

  1. அருமையாக சொன்னீர்கள் பாபு.....பாடல்களை எப்போதும் நம்மை கடந்த காலத்திருக்கு அழைத்து செல்லும் ஒரு டைம் மெஷினாகவே என்னால் பார்க்க முடிகிறது.... வாசனைகளும் நோஷ்டால்ஜிக் நினைவுக்கு எப்போதாவது இரை போடும். லைப் பாய் சோப்பின் மனம்,கோகுல் சாண்டல் பெளடரின் மணம் என பலவை என்னை பின்னோக்கி அழைத்து செல்வதுண்டு......

    ReplyDelete