Friday, January 21, 2011

Thai poosa special Murugan song I wrote


உண்டு களித்து உடல் பெருத்து
உன் நினைவின்றி உலகச் சுகந்தன்னை
பெரிதென்று நினைத்து மாயையில் திளைத்து
ஆசை, கோபம், புகழ், காமம், வெறுப்பு, பகை எனும்
உணர்வுகளுக்கு அடிமையாகி போன - எனக்கு
ஆண்டிக் கோலம் காட்டி
வாழ்வின் பொருள் புரிய வைத்தாய் முருகா!

ஆடும் மயில் கொண்டு - என்
ஆணவம் அழித்திட வா!

பன்னிரு விழியில் கனிவாய் கண்டு - என்
பாவம் போக்கிட வா!

மன மாயை அகற்றி - என்னை
தூயவானாக்கிட விரைந்து வா!

கேடாய் போன எண்ணங்களை வதம் செய்ய
வேல் கொண்டு வந்து விடு!

இனி என் எண்ணமெல்லாம் உன்னையன்றி
வேறு யாரும் இல்லை!

No comments:

Post a Comment