Saturday, December 08, 2012

Lessons for 2013


Start - Stop - Continue is a good practice in self-evaluation. Even you come up with one point in each item then it will give a great feeling & surely you end up making the quite a big list.

In certain cases, you may end up having same item existing in start and stop with just change in phrases like 'Going to bed early' in Start & 'Going to bed late' in Stop. That's okay & excellent in one way that you will get double impact when reading it.Friday, August 31, 2012

சிந்தனைகள் - சிதறியபோது

இன்றைய அரசியல் சூழுலில் பொய்யாப் புலவரின் பின்பற்ற முடியாத அறிவுரைகளில் முதலிடம் பிடிப்பது இதுவாகத் தான் இருக்கும் -

”எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.”

யார் சொல்கிறார்களோ அவர்களின் யோக்கிதையை குறை கூறுகிறார்களே ஒழிய சொல்லிய விஷயத்தை ஒரு இம்மி அளவுகூட காதில் வாங்குவதாக தெரியவில்லை.

 

நாட்டில் நோய் தொற்று, வறுமை கூட மெதுவாகத்தான் பரவி மனிதனை கொல்கின்றன ஆனால் இந்த வதந்தி மட்டும் தீயை விட வேகமாக பரவி - நோயைவிட அதிகமாகக் கொல்லும் தன்மை உடையது. மூன்றாம் உலகப் போருக்கு அணு ஆயுதம் காரணமாக இருக்குமே இல்லையோ ஆனால் வதந்திகளும் அதனால் ஏற்படும் அச்சமும் நிச்சயமாக காரணியாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

முன்பு குறிப்பிட்டது போல - இன்றைய நிறுத்தி நிதானமாக விசாரிக்கும் சூழல் இல்லாத உலகில் பொய்த்து போய் நிற்பது பொய்யாப் புலவரின் “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்..” என்ற குறள் தான்.

Saturday, August 25, 2012

Naan, Attakathi – Movie Reviews

"Naan" - is an entirely different movie in Thriller genre after long time.. seeing such a good screenplay (with very minute flaws).. very less dialogues & more background score.. except 1 song all others are apt in timings.. Vijay Anthony as an actor did really well.. I can give 4/5 for the whole movie.. I think they are planning to take part 2 as it ends with "To be continued"..

One other movie that I enjoyed watching last week was "Attakathi" (Tamil).. This one is comedy and gave a different dimension on love.. in 1980s films used to come with love failure and suicide after love rejection.. This film is entirely opposite to that.. live even your love failed as another love is waiting for you :-).. newcomer hero did an excellent job portraying the character very well.. good comedy one too.. 3.8/5..

Monday, August 13, 2012

My Vision India 2022 – Mind Map

India 2022 - India 10 years from now. This one I prepared for Independence day - bay decoration contest. Though I prepared the mind map. it was an outcome of team's brainstorm activity & my contribution largely on representing in mind map format. Topic & idea credit goes to the team.

579848_506115449402405_1790055397_n

Monday, July 02, 2012

Don’t Quit–Poem from Unknown Author

When things go wrong, as they sometimes will,
When the road you’re trudging seems all uphill,
When the funds are low and the debts are high,
And you want to smile, but you have to sigh,
When care is pressing you down a bit,
Rest, if you must, but don’t you quit.

Life is queer with its twists and turns,
As every one of us sometimes learns,
And many a failure turns about,
When he might have won had he stuck it out;
Don’t give up though the pace seems slow–
You may succeed with another blow.

Often the goal is nearer than,
It seems to a faint and faltering man,
Often the struggler has given up,
When he might have captured the victor’s cup,
And he learned too late when the night slipped down,
How close he was to the golden crown.

Success is failure turned inside out–
The silver tint of the clouds of doubt,
And you never can tell how close you are,
It may be near when it seems so far,
So stick to the fight when you’re hardest hit–
It’s when things seem worst that you must not quit.

- Unknown Author

Monday, June 25, 2012

A Devil called "Bore-well Hole"

Do we have better idea or working model to rescue a person who got trapped in a bore-well hole? I see most of our rescue attempts to save them go waste and feeling very sorry about that.

Is there any way to find open bore-well holes through satellite images and city administrative people can be alerted on that? Is that possible?

Here is the news about latest victim: http://ibnlive.in.com/news/three-days-on-4yearold-still-trapped-in-borewell/267457-3.html

Wednesday, June 13, 2012

குழந்தை தொழிலாளர் ஒழிப்போம்.....

நான் நடந்த பாதையெல்லாம்
தங்கச் சாலை.. ஓ! அது
நீ செருப்பில்லாமல் முதுகொடிய
முப்பது ரூபாய் சம்பளத்தில் தூக்கியதோ!

காரில் நான் வந்து ரசிக்கும்
கடல் நீர் உப்பாய் மாறியதும்
உன் கண்ணீராலோ!

ஆயிரம் காமராஜ் உனக்காக உருவெடுத்தாலும்
 

ஒவ்வொரு மனிதனும் துணை நிற்காமல்
உன் தலை சும்மாடு கீழே இறங்காது கண்ணே!

நான் புறப்பட்டுவிட்டேன்..
உங்களில் ஒரு தலைக்கு விடுதலை..
தோழா.. நீயும் வருகிறாயா?
இன்னொரு தலையின் பாரம் நீக்கலாம்..

Tuesday, April 24, 2012

கண்ணாடி மக்கள்

சிலர் தங்களின் வாழ்கையை ஒளி உடுருவி செல்லும் சாதாரண கண்ணாடி போல கருதிக்கொள்கிறார்கள். ஆம்! எந்த கருத்தோ உபதேசமோ அடுத்தவருக்கு கொடுத்து விட மட்டுமே உபயோகிறார்களே ஒழிய தங்களின் வாழ்வை வளப்படுத்திக்கொள்ளும் ஒரு வழியாக இருப்பதாக நினைப்பதில்லை. இந்த வேடிக்கை மனிதர்கள்  தாங்கள் செய்யும் எல்லா காரியங்களும் சரியே என்றும் அடுத்தவரின் செயலில் மட்டும் குறை உள்ளதாக கருதுகின்றனர்.

Sunday, April 22, 2012

Top Ten Free Applications that I liked the most

Certain applications catches our heart and we tend to use them whatever be the competition & how much ever features we get from other applications. Following is Ten applications in different categories that I use & all computer that I use will have these applications for sure.

10. PDFill PDF Editor (Category: PDF Editing)

When I wanted to save my web receipts in local disks I found this tool. During initial days, I used ‘Save Webpage As’ which provided option to save as HTML, but that output didn’t get render properly in different web browsers and also the linked images were not showing up when I tried offline printout. I badly in need of PDF file kind of storage. First I tried pdf995. Though it worked well, I got nagging messages all the time. So I switched to PDFill PDF. It gave me full power to whatever I want to do with a PDF file – a) convert any page to image b) enable printing option in print protected PDF files c) PDF printer driver enabled printing any document to PDF format. Especially, the output PDF file allows copy paste of its content again back which produces the same font effect. This is not the case in other PDF print driver softwares – they usually produce series of illegible box characters when we copy paste from their output PDF files. Now in 9.0 version, they provide state of art PDF Editor free. Download & try yourself in below website.

Website:http://www.pdfill.com/

9. XMind (Category: Mind Mapping)

Few years back, I got introduction to Mind Mapping techniques through books. I got interested in the subject and started exploring different Mind Mapping software tools existing in the market. One Mind Map tool that give enough features for Free usage is XMind. Some industry leading softwares provide just 7 days trial and they attach watermark or unwanted extra information  while printing. I found XMind is easy to use, enables integration with many other industry standard formats, excellent feature on export to images. No need to go anywhere for your Mind Mapping needs – go for XMind.

Website: http://www.xmind.net/

8. Serviio (Category:Media Server)

Next application falls in the Media server category. You think of any feature that a media server can perform – it is there in Serviio. Streaming your media files to other devices connected to the home network, seamlessly integrates and plays any type of media file, online streams, and more than that it is Free. I compared it with other products from Nero and TVersity & I liked serviio over others because of simplicity, versatility, small application size and readiness for improvements.

http://www.serviio.org/

7. JDownloader (Category: Download Manager)

-- Add Content Later

Website: http://jdownloader.org/

 

6. Media Player Classic (Category: Media Player)

-- Add Content Later

Website: http://mpc-hc.sourceforge.net/

5. Notepad++ (Category: Text Editor)

-- Add Content Later

Website: http://notepad-plus-plus.org/

4. Pidgin (Category: Instant Messenger)

-- Add Content Later

Website: http://www.pidgin.im/

3. CCleaner (Category: Computer Maintenance)

-- Add Content Later

Website: http://www.piriform.com/ccleaner

2. NHM Writer (Category: Language Utility)

-- Add Content Later

Website: http://software.nhm.in/products/writer

 

1. Mozilla Firefox (Category: Web Browsers)

-- Add Content Later

Website: http://www.mozilla.org/en-US/firefox/fx/

Tuesday, April 10, 2012

சமீபத்தில் படித்து பிடித்துபோன திருக்குறள் – நட்பை பற்றியது

இரு தினங்களுக்குமுன் முதன்முறையாக ஒரு திருக்குறளை படித்தேன் – படித்த மாத்திரத்தில் பிடித்துப்போனது. அது நட்பைப் பற்றி எளிதாக இயல்பாக விளக்கியது. இதை ஆண் – பெண் இருபாலரின் நட்புக்கும், திருமணத்திற்குப்பின் கணவன் – மனைவியிடையே கண்டிப்பாக இருக்கவேண்டிய நட்பு முறைக்கும் விளக்கமாக கொள்ளலாம். இதை படிக்கும் போது கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையாரின் நட்பு கதை கண் முன் நிழலாடுவதை தவிர்க்கமுடியவில்லை.

பொருட்பால் - நட்பியல் - நட்பு

குறள் 785:

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.
கலைஞர் உரை:
இருவருக்கிடையே நட்புரிமை முகிழ்ப்பதற்கு ஏற்கனவே தொடர்பும் பழக்கமும் வேண்டுமென்பதில்லை. இருவரின் ஒத்த மன உணர்வே போதுமானது.
மு.வ உரை:
நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை, ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுத்துவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவனோடு ஒருவன் நட்புக் கொள்வதற்கு அருகருகே இருப்பதோ, நெருங்கிப் பழகுவதோ வேண்டியதில்ல. இருவரது எண்ணமும் ஒத்திருந்தால் அதுவே நட்பு என்னும் தோழமையைக் கொடுக்கும்.
Translation:
Not association constant, not affection's token bind;
'Tis the unison of feeling friends unites of kindred mind.
Explanation:
Living together and holding frequent intercourse are not necessary (for friendship); (mutual) understanding can alone create a claim for it.

நன்றி - http://www.thirukkural.com/

Monday, April 09, 2012

NHM Writer – தன்னிகரில்லா தமிழ் வழி தட்டச்சு மென்பொருள்!

தமிழில் எழுதும் ஒவ்வொரு கணிப்பொறி வலைப்பூ எழுத்தாளரும் தங்களின் தேவைக்கு எதாவது ஒரு மென்பொருளை தன் கைப்பொருளாகக் கொண்டு அதில் தட்டச்சு செய்வர். சமீப காலமாக பல தட்டச்சு மென்பொருட்கள் வந்தாலும் என் மனம் என்னவோ NHM Writer மூலமாக தட்டச்சு செய்வதையே கடந்த மூன்று ஆண்டுகளாக நாடுகிறது. இதற்கு அந்த மென்பொருளின் சில சிறப்பு அம்சங்களே காரணம்:

1. பேச்சு வழி தட்டச்சு (phonetic keyboard) முறை எளிதாக கிடைக்கிறது. Google translate பயன்படுத்தும்போது அவை வரிசை படுத்தும் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரயோகங்களில் இருந்து தேர்ந்தெடுப்பதே ஒரு பெரிய வேலை.

2. துரித தட்டச்சு இயக்கம் hotkey மூலம் வெகுவாக இயக்க முடியும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Alt +0 என்றும் பேச்சு வழி தட்டச்சுக்கு உடனே மாற Alt + 2 பொத்தான்களை இயக்கினாலே போதும்.

3. இந்த மென்பொருள் தனக்கென ஒரு Editor ஐ உள்ளடக்கியது இல்லை. எந்த Editor ல் இருக்கிறீர்களோ அதையே உபயோகித்துக் கொள்ளும். உதாரணமாக – WinWord, Notepad, FireFox text box controls என எதில் இதை இயக்கினாலும் தமிழில் உடனே தட்டச்சு செய்யலாம். முக்கியமாக வலைப்பூ தொடுக்கும் போது மிகவும் உபயோகமாக இருக்கிறது.

4. அனைத்து Web Browser களிலும் இதை இயக்க முடிவதால் facebook, mail, forums என எதிலும் தமிழை பயன்படுத்த முடிவது எனக்கு பிடித்துப் போக இன்னொரு காரணம்.

 

உங்களுக்கு வேண்டுமெனில் இங்கே சொடுக்கி இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Tuesday, March 13, 2012

கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் நட்பு

     பாண்டிய நாட்டில்  உள்ளது  பிசிர்  என்ற  ஊர்.  ஆந்தையார்  என்பது  இவரது  இயற்பெயர்.  ஆதலால்  பிசிராந்தையார்  என்று  அழைக்கப்பெற்றார்.  இவர்  சோழ  மன்னன் கோப்பெருஞ்சோழன்  மீது  அன்பு  கொண்டு  அவனைப்  பற்றிய  பாடல்களைப்  பாடியுள்ளார்.  சோழனைக்  காணவேண்டும்  என்னும்  பேரவா  கொண்டிருந்தார்.  ஆனால்  பாண்டிய  நாட்டிலுள்ள  பிசிர்  வெகு  தொலைவு  உள்ளதால்  இவரால்  சோழ  நாட்டுக்குச்  செல்ல  இயலவில்லை.
     இவரது புகழையும்  தமிழையும்  கேள்விப்பட்ட  சோழனும்  இவரைக்  காணவேண்டும்  என்னும்  அவா  கொண்டிருந்தான்.  எனவே  இருவரும்  உயிர்  ஒன்றாகவும்  உடல்  வேறாகவும்  வாழ்ந்து  வந்தனர். இருவரும்  தாம் ஒருவருக்  கொருவர் சந்திக்கும்  திருநாளை  ஆவலுடன்  எதிர்  பார்த்துக்  கொண்டிருந்தனர்.


     கோப்பெருஞ்சோழனின்  தலைநகர்  உறையூர்.  இம்மன்னன்  பிசிராந்தையாரை  நேரில்  காணாமலேயே  அவருடன்  நட்புக் கொண்டவன்.  இவனது  ஆட்சி  நடந்துகொண்டிருக்கும்  போதே  இவனது  இரண்டு  புதல்வர்களும்  சோழ  ஆட்சிக்  கட்டில்  ஏறுவதற்காக  தந்தையுடன்  போரிடத்  துணிந்தனர்.
     இதை  அறிந்த  கோப்பெருஞ்சோழன்  ஆட்சியை  விட்டு  வடக்கிருந்து  உயிர்  விடத்  துணிந்தான்.  அப்போது  தன்  மந்திரியிடமும்   மற்றையோரிடமும்   பிசிராந்தையார்  என்னைக்  காண  வருவார்.  என்னுடன்  வடக்கிருப்பார்.  அவருக்கும்  ஓர்  இடத்தைத்  தயார்  செய்யுங்கள்  எனக்  கூறினார்.    அதேபோல்  பிசிராந்தையாருக்கும்  ஒரு  இடம்  அமைக்கப்பட்டது.  நாட்கள்  கடந்தன.  சோழன்    பிசிரந்தையாரைக்  காணாமலேயே  வடக்கிருக்கத்  துணிந்தான்.   எப்படியும்  ஆந்தையார்  வந்து  விடுவார்  எனக்  கூறித்  தன்  தவத்தை  மேற்கொண்டான்.  


(குறிப்பு: இவ்வுலக  வாழ்வைத்  துறக்க  விரும்பும்  மன்னவர்  வடக்கிருந்து  உயிர்  விடுதல்  அக்கால  மரபு.  வடக்கிருத்தல்  என்பது  தன்நாட்டில்  உள்ள  ஆறு  குளம்   போன்ற    நீர்  நிலைக்குச்  சென்று  அதன்  இடையே  மணல்  திட்டு  ஒன்றை    அமைத்து   வடக்கு  திசை  நோக்கி  அமர்ந்து  உண்ணாநோன்பிருந்து  உயிர்  விடுதல்.  தன்  மக்கள்  மீது  இருந்த   மனக்  கசப்பின்  காரணமாக  கோப்பெருஞ்சோழனும்   வடக்கிருந்தான்.)


இதனைக்  கேள்விப்பட்டார்  பிசிராந்தையார்.  உடனே   சோழ  நாட்டை  நோக்கி  ஓடி  வந்தார்.


வழியில்  எதிர்ப் பட்டவர்  இவரைப்  பார்த்து  மிகவும்  ஆச்சரியப்  பட்டனர்."புலவரே!  நான்  என்  சிறுவயது  முதலே  தங்களைப்  பற்றி  என்  தந்தையார்   கூறக்  கேட்டிருக்கிறேன்.  தங்கள்  மிகவும்  வயதானவராக  இருப்பீர்கள்  என்று  எண்ணியிருந்தோம்.  தங்களோ  மிகவும்  இளமையாக  இருக்கின்றீர்களே, அது  எப்படி?"என்று  வியந்து  கேட்டனர்.  அதற்கு  மறுமொழியாக  ஆந்தையார்   ஒரு  பாடல்  பாடினார்.  புறநானூற்றில்  உள்ள  இப்பாடல்  நமது  வாழ்வியலுக்கு  மிகவும்  தேவையான  ஒன்று.


         " யாண்டு  பலவாக  நரையில வாகுதல்
          யாங்காகியர்  என வினவுதிராயின்,
           மாண்ட  என்  மனைவியொடு  மக்களும்  நிரம்பினர்
           யான்  கண்டனையர்  என்  இளையரும்   வேந்தனும்
          அல்லவை  செய்யான்   காக்கும்  அதன்  தலை
           ஆன்று  அவிந்து  அடங்கிய  கொள்கைச்
           சான்றோர்  பலர்  யான்  வாழும்  ஊரே."   


என்று  பாடிய  பாடல்  மூலம்  " வயோதிகரானாலும்  இளமையோடிருக்கும்  காரணத்தைக்  கேட்பீரானால்   சிறந்த  பண்புள்ள  மனைவி,  மக்கள்  குறிப்பறிந்து  பணி  செய்யும்  பணியாளர்கள்  அறத்தையே  நாடிச்  செய்யும்  மன்னன்  இத்துணை  பேருடன்  நன்கு  கற்று    நல்ல  பண்புகளுடன்  விளங்கும்  சான்றோர்  பலரும்  எம்மைச்  சூழ்ந்து  இருக்க  நான்  வாழ்வதால்  எனக்கு  நரை  தோன்றவில்லை.  மூப்பும்  எம்மை  அணுகவில்லை."   என்று  விளக்கினார்.  
     சோழனின்  இறுதி  நேரம்  வந்துற்றபோது  பிசிராந்தையார்  ஓடிவந்தார்.  நண்பனைக்  கண்டார்  தனக்காகத்  தயாராக  அமைக்கப்பட்ட  இடத்தில்  வடக்கிருந்து  சோழனுடன்  தானும்   தன்  இன்னுயிர்  விடுத்தார்.


     இச்செய்தியை    இக்காட்சியைக்  கண்ட   பொத்தியார்  என்னும்  புலவர்   தன்  பாடலில்  இதனைக்  கூறுகிறார்.
      "இசைமரபு  ஆக  நட்பு  கந்தாக
       இனியதோர்   காலை  ஈங்கு  வருதல்
       வருவன்  என்ற  கோனது  பெருமையும்
       அது  பழுதின்றி  வந்தவன்   அறிவும்
       வியத்தொறும்  வியத்தொறும்   வியப்பிறந்தன்றே."


பிசிராந்தையார்  என்ற  புலவரும்  கோப்பெருஞ்சோழன்  என்ற  மன்னனும்  தம்முள்  காணாமலேயே  நட்புக்  கொண்டு  ஒன்றாக  உயிர்  நீத்த  இச்சிறப்பினை  இலக்கியங்கள்  நமக்கு  எடுத்து  இயம்புகின்றன.  இத்தகு  நண்பர்களை  நம்மால்  மறக்க  இயலுமா?


நன்றி : http://chuttikadhai.blogspot.in/

Monday, March 12, 2012

சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்


சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்…  (கண்டிப்பாக படிக்கவும் !!!)

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்...

Wednesday, February 08, 2012

iTune Trick - How to delete invalid tracks from iPod if files are deleted through Windows Explorer

Sometime back, I was in a hurry to carry some files in a storage media. All I found was my iPod. I randomly deleted few files from "M:\iPod_Control\Music\F04" folders.

Now, i tried playing music in the iPod, but started getting non playing tracks due to my file deletion through Windows explorer. I connected it to iTunes to clean up those invalid tracks. I found a painful way to do that. I need to play each song, if it is not playing then I need to delete it. I tried getting some info or tools to do this activity, all suggestions I got are - use a costly software or move all files to music folders then delete them, later import them.

After a little bit of research I found an easy method to do this activity with iTunes.

1. Connect you iPod & launch the iTunes.
2. Select Music folder from your device.
3. Select all music files listed in the right pane.
4. Right click on the selected files pane.
5. Choose "Reset Plays" option
6. Say "Reset" to the message stating "Are you sure you want to reset the number of plays and skips of the selected songs?". (Note: This is the only thing you will be losing if you do in my way. You need to weigh - is cleaning up the whole list is more important than losing played tracks count.)
7. Now check the very first column without any column name (it is usally left side to tick mark column).
8. Those songs that are deleted shows a ! symbol within a circle.
9. Delete those songs from iTunes list. (Here you cannot sort based on the first column. So still you need to select all those ! marked ones for deletion)
10. Now you are done with cleanup activity.

Share this tip and enjoy.

Tuesday, January 24, 2012

No one can hurt us without our consent - Real life story from Abraham Lincoln's life

On the first day, as President Abraham Lincoln entered to give his inaugural address, just in the middle, one man stood up. He was a rich aristocrat. He said, “Mr. Lincoln, you should not forget that your father used to make shoes for my family.” And the whole Senate laughed; they thought they had made a fool of Abraham Lincoln.

But Lincoln --- and that type of people are made of a totally different mettle. Lincoln looked at the man and said, “Sir I know that my father used to make shoes in your house for your family, and there will be many others here…. Because the way he made shoes; nobody else can. He was a creator. His shoes were not just shoes; he poured his whole soul in it. I want to ask you, have you any complaint? Because I know how to make shoes myself. If you have any complaint I can make another pair of shoes. But as far as I know, nobody has ever complained about my father’s shoes. He was a genius, a great creator and I am proud of my father”..

The whole Senate was struck dumb. They could not understand what kind of man Abraham Lincoln was. He was proud because his father did the job so well that not even a single complaint had ever been heard.

Remember:
“No one can hurt you without your consent.”

“It is not what happens to us that hurts us. It is our response that hurts us.”