Sunday, January 20, 2013

மனமாற்றம் எப்போது வரும்?

மனமாற்றம் என்பதின் விளக்கம் – தான் சரியென்று நினைத்த ஒன்றை அந்நிலையில் இருந்து மாறி தவறு என உணருவதோ அல்லது தவறு என்று நினைத்த ஒன்றை சரியென்று தெளிவதோ மனமாற்றமாகும்.

ஒரு உரைநடைப்பகுதியில், கைகேயியின் மனமாற்றத்தை அழகாக விவரித்திருப்பார்கள். மந்தரை பேச பேச கைகேயின் மனம் ஒரு நிலையில் இருந்து அதன் நேரெதிர் நிலைக்கு மாறுவதை கம்பனின் வரிகள் கொண்டு ஆசிரியர் விளக்கி இருப்பார்.

ஒரு சிலருக்கு மனமாற்றம் என்பது – ஒரு நொடியில் வரலாம், சிலருக்கு நாள், வாரம், மாதம் ஆகலாம். சிலருக்கோ வருடங்கள் பலவாகும்.

மனிதரில் ஒரு பிரிவினருக்கு ஜென்மம் எடுக்கும். அப்போது எனக்கு நினைவுக்கு வரும் திரைப்பாடல் வரிகள் “திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்..” என்பது.

No comments:

Post a Comment