Thursday, February 21, 2013

மென்பொருள் தயாரிப்பில் படிப்படியான உருவாக்கம் மற்றும் சுழல் முறை நுட்பம்(Agile Scrum Method)–பாகம் 2

நாம் சுழல் முறை நுட்பத்தை பற்றி தெரிந்து கொள்ளும் முன் - முதலில் கணினி மென்பொருள் தயாரிப்பில் உள்ள சில உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

1. மென்பொருள் மூலம் பயன் ஈட்டும் நிறுவனங்கள் அல்லது பயனாளர்களின் தேவை நாளுக்கு நாள் மாறக்கூடியது – அவர்கள், புதிய தேவைகளை முன்கூட்டியே தெரிந்து தெரியப்படுத்துதல் என்பது கடினம். புதிய சிந்தனை வரும் போதெல்லாம் அவைகளை தங்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் மென்பொருளில் உடனடியாக வடிவமைத்து - உபயோகித்துக் கொள்ள விழைகின்றனர்.

2. மென்பொருளின் தரச்சோதனைக்கு நாள் கடத்த கடத்த அதில் தயாரிப்பின் போது முன்னரே கண்டுகொள்ளாமல் விடப்பட்ட பழுதுகள் புரையோடி பெரியதாக மாறி அதை பயனில்லாத மென்பொருளாக ஆக்கிவிடுகிறது.

No comments:

Post a Comment