Thursday, November 28, 2013

படித்ததில் பிடித்தது....

'ஒரு குட்டிக் கதை. கடவுளோடு பேசிக்கொண்டிருந்த மனிதன் அவரிடம் ஒரு கேள்வி கேட்டான். 'சாமி உங்களுக்கு ஒரு கோடி வருஷம்ங்கிறது எவ்வளவு நேரம்?’ அதற்கு கடவுள் சிரித்துக்கொண்டே, 'ஒரு கோடி வருஷம்ங்கிறது எனக்கு ஒரு நிமிஷம்’ என்றாராம். இதைக் கேட்டு சந்தோஷமடைந்த மனிதன், 'அப்ப ஒரு கோடி ரூபாய்ங்கிறது சாமி?’ என்று கேட்க, 'ஒரு ரூபாய் போல’ என்றாராம் கடவுள். உடனே கடவுளை மடக்க நினைத்த மனிதன், 'சாமி எனக்கு ஒரு ரூபாய் கொடுங்களேன்’ என்றானாம் ரொம்ப அடக்கமாக. கடவுள் மென்மையாகச் சிரித்துக்கொண்டே, 'ஒரு நிமிஷம் பொறு!’ என்றாராம். அதனால் அவர் இறைவன்!''

- சந்திராசிவபாலன், திருச்சி. (விகடன் நானே கேள்வி... நானே பதில் பகுதி)

No comments:

Post a Comment