Friday, November 15, 2013

அன்பும், அமைதியும் தவழ்ந்தால்.. குட்டிக்கதை

ஒரு துறவி, தன் சீடருடன் காட்டு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் திடீரென ஒரு சிங்கம் தென்பட்டது. சிங்கத்தைப் பார்த்த சீடன் நடுநடுங்கிப் போய், “இப்போது என்ன செய்வது?” என்று குருவிடம் கேட்டான்.

“ஒன்றும் செய்ய வேண்டாம்”, என்று கூறிய குரு, கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்தார். குருவின் மனதில் உருவான அமைதி, அந்தச் சிங்கத்தையும் தொற்றிக் கொண்டது. சிங்கம், தன் மூர்க்கத் தன்மையை இழந்து சாதுவாக திரும்பிச் சென்றது.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், அன்பும், அமைதியும் தவழ்ந்தால், எதிரில் இருப்பது கொடிய மிருகமே ஆனாலும், அதற்கு நாம் அன்பையும், அமைதியையும் ஊட்ட முடியும் என்பதைத் தான். அன்பும், அமைதியும் இல்லாத இடத்தில் ஆத்திரம் தான் குடிகொண்டு இருக்கும்.

No comments:

Post a Comment