Saturday, February 22, 2014

தூக்கத்தின் மீது என் காதல்..

நான் தூக்கம் இன்றி கழித்த இரவுகள் எத்தனையோ.. அப்போதெல்லாம்
ஏன் என்று கேட்போர் யாரும் இல்லை..
எப்படி என்று தெரியவில்லை.. 
இன்று சற்று அயர்ந்து தூங்கிவிட்டேன்.. 
இவ்வளவு நாள் இல்லாமல் இன்று மட்டும் என்ன.. 
என் தூக்கத்தை பார்க்க இத்தனை பேரா?
சுற்றி பேசுவோரின் பேச்சுகளும்.. சிணுங்கள்களும்கூட 
எனக்கு தாலட்டாய் மாறி இன்னும் நன்றாய் தூங்க செய்கிறதே!
ஆஹா.. இப்படி ஒரு தூக்கத்திற்குத்தான் வருடக்கணக்கில் நான் ஏங்கி இருந்தேன்...
காலை கடனுக்கும்கூட கைத்தாங்கி கழிப்பிடம் அழைத்து செல்வோர் எவரும் இல்லை..
கட்டிலிலே நான் கழித்த வேதனையை கேள் அது சொல்லும்..
இன்றோ என்னைத் செல்ல கூட்டிச்செல்ல எத்தனைப் போட்டி..
இந்த வாய்ப்பை நான் விடப்போவதில்லை..
எவ்வளவு நேரம் முடியுமோ உறங்கிக்கொண்டே இருப்பேன்..