Monday, July 31, 2017

தித்திக்கும் தேன்பாகும் - TMS Song Lyrics


தித்திக்கும் தேன்பாகும்
திகட்டாத தெல்லமுதும்
தீஞ்சுவை ஆகவில்லையே - முருகையா!
தீஞ்சுவை ஆகவில்லையே (2)

எத்திக்கும் புகழ் கந்தன்
இன்சொல் எழுத்தினைபோல
இன்பம் ஏதுமில்லையே - குமரையா!
இன்பம் ஏதுமில்லையே

அக்தரும் ஜவ்வாதும்
அள்ளியே பூசிடினும்
அங்கம் மணக்கவில்லையே - முருகையா!
அங்கம் மணக்கவில்லையே (2)

சித்தம் மணக்கும்
செல்வக்குமரன் பெயரினைப்போல
சீர்மணம் வேறு இல்லையே - குமரையா!
சீர்மணம் வேறு இல்லையே

முத்தும் இரத்தினமும்
முத்திரை பசும்பொன்னும்
முதற்பொருள் ஆகவில்லையே - முருகையா!
முதற்பொருள் ஆகவில்லையே

சத்தியவேல் என்று
சாற்றும் மொழியினைப்போல
மெய்ப்பொருள் வேறு இல்லையே - குமரையா!
மெய்ப்பொருள் வேறு இல்லையே

எண்ணற்ற தெய்வங்கள்
எத்தனை இருந்தாலும்
எண்ணத்தில் ஆடவில்லையே - முருகையா!
எண்ணத்தில் ஆடவில்லையே (2)

மண்ணுக்குள் மகிமை பெற்ற
மாமலை முருகன் போல்
மற்றொரு தெய்வமில்லையே - குமரையா!
மற்றொரு தெய்வமில்லையே

தித்திக்கும் தேன்பாகும்
திகட்டாத தெல்லமுதும்
தீஞ்சுவை ஆகவில்லையே - முருகையா!
தீஞ்சுவை ஆகவில்லையே

எத்திக்கும் புகழ் கந்தன்
இன்சொல் எழுத்தினைபோல
இன்பம் ஏதும் இல்லையே - குமரையா!
இன்பம் ஏதும் இல்லையே

தித்திக்கும் தேன்பாகும்
திகட்டாத தெல்லமுதும்
தீஞ்சுவை ஆகவில்லையே - முருகையா!
தீஞ்சுவை ஆகவில்லையே

முருகையா!!!!...

No comments:

Post a Comment